ரோஹிணி விஜேரத்னவின் நற்பெயருக்கு கலங்கம் - சஜித் சபாநாயகரிடம் கோரிக்கை
ரோஹிணி விஜேரத்னவின் (Rohini Kumari Wijerathna) நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இலக்கு வைத்து நடத்தப்படும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன, ஓர் ஆசிரியராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அர்ப்பணிப்புள்ள சமூக சேவையாளராகவும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்த சேவைகளை ஆற்றி வருகிறார்.
கல்வித் துறை, சகல பெண்களின் சிவில், அரசியல், மனித, சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்
என்றாலும், இந்த நாடாளுமன்றத்தில் உள்ள சில உறுப்பினர்கள் அவரை இலக்கு வைத்து, அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் இழிவான விமர்சனங்களை இடைவிடாது செய்வதன் மூலம் அவரது பயணப் பாதையைத் தடுத்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்று பெரும்பான்மையானவர்கள் கூறினாலும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் அதனை நடைமுறையில் முன்னெடுப்பது கடமையாக அமைகிறது.
ரோஹிணி விஜேரத்னவை இலக்கு வைத்து அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகள் குறித்து நான் எனது ஆழ்ந்த அதிருப்தியை தெரிவிக்கின்றேன்.
தனிநபர் பிரேரணை
ரோஹிணி விஜேரத்னவின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகருக்கு பொறுப்பு காணப்படுகின்றது. இதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரோஹிணி விஜேரத்னவின் தந்தை தனிநபர் பிரேரணை மூலம் விவசாயிகளினது ஓய்வூதியத் திட்டத்தை ஸ்தாபித்த ஒருவராவார். அவர் ஆற்றிய மகத்தான சேவையை அனைவரும் அறிவர்.
ரோஹிணி விஜேரத்னவின் நற்பெயரை கொடுக்கும் வகையில், இலக்கு வைக்கப்பட்ட இந்த இழிவான செயல்முறையை நிறுத்துங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
