கத்தாருக்கு சென்று மீண்டும் விளையாட உள்ள ஜாம்பவான்கள்..!
ஆர்ஜென்டினா அணி கத்தாரில் நடந்த உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து ஆர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி மீண்டும் கத்தாருக்கு சென்று விளையாட உள்ளார்.
மெஸ்ஸியின் PSG அணி வருடாந்திர குளிர்கால சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
ரொனால்டோ - மெஸ்ஸி
பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணி நட்புரீதியான போட்டியில் விளையாட கத்தாருக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கத்தாரில் தோஹா மற்றும் சவூதி அரேபியாவின் ரியாத் நகரங்களுக்கு செல்ல உள்ளதாக PSG அணி அறிவித்துள்ளது. நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பே மற்றும் நெய்மர் இடம்பெற்றுள்ள PSG அணி ஜனவரி 18, 19 திகதிகளில் தோஹா, ரியத்திற்கு பயணம் செய்ய உள்ளது.
அங்கு ரொனால்டோ இடம்பெற்றுள்ள அணியான அல் நஸருடன் மெஸ்ஸியின் அணி மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ரொனால்டோ - மெஸ்ஸியின் மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் சுற்றுப்பயணங்களை கத்தார் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
