முதல் முறை கிண்ணம் வென்ற அல் நஸீர் அணி - அற்புதமான சாதனை என பாராட்டிய ரொனால்டோ
சவூதி அரேபியா மகளிர் பிரீமியர் லீக் தொடரை வென்ற அல் நஸர் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் அல் யமமஹ் அணியை எதிர்கொண்ட அல் நஸர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன்மூலம் முதல் முறையாக சவூதி அரேபியா மகளிர் பிரீமியர் லீக் தொடரை வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சாம்பியன் பட்டம்
??? pic.twitter.com/Kc0BqhU3iV
— إدارة الكرة النسائية - SAFF (@saff_wfd) February 11, 2023
சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய வீராங்கனைகள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர்.
ஆடவர் அல் நஸர் அணியில் விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாம்பியன் பட்டத்தை வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'முதல் முறையாக சவூதி அரேபிய லீக் தொடரை வென்ற மகளிர் அல் நஸர் அணிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். என்னவொரு அற்புதமான சாதனை' என தெரிவித்துள்ளார்.
Huge congratulations to @AlNassrFC_EN women’s team on their 1st league win. Such a fantastic achievement ????? pic.twitter.com/X8kycfdqC0
— Cristiano Ronaldo (@Cristiano) February 12, 2023