சிறைக்கைதி வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இலட்சக்கணக்கிலான பணம்
இலங்கையில் (Sri Lanka) சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 28 கோடி ரூபா ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருணாகலில் (Kurunegala) போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தப்பணம் மீட்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போது 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், கெப் ரக வாகனம் ஒன்றும் மற்றும் வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்
சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வீட்டிலேயே திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் சிறைச்சாலைக்குள் இருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்தி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் முதன்முறையாக பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |