அநுர அரசின் இனவாதத்தை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி.

Gajendrakumar Ponnambalam
By Thulsi Jan 18, 2025 03:13 AM GMT
Report

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ''கடந்த வாரம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் கைதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் ஆதரவுடன் கையொப்பம் பெறும் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அது வெற்றி பெற்றுள்ளமையை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மத்தியக்குழுவுக்கு கட்டுப்படாத தமிழரசுக் கட்சியின் அடாவடி : அம்பலப்படுத்தும் உறுப்பினர்

மத்தியக்குழுவுக்கு கட்டுப்படாத தமிழரசுக் கட்சியின் அடாவடி : அம்பலப்படுத்தும் உறுப்பினர்

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம்

விசேடமாக தமிழ் மக்களுக்காகப் போராடி ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மெளனிக்கப்பட்ட போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் அரசாங்கத்தினாலேயே ஒரு சட்டவிரோதமான, கொடூரமான, சட்டத்தின் ஆட்சியை மீறுகின்ற ஒரு ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கருத்து ஸ்ரீலங்கா அரசினால் சர்வதேச மட்டத்தில் விசேடமாக ஐ.நா. பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு சட்டத்தின் ஆட்சி முறைக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான விடயமாகவும் கருதப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டம்

அது முற்றிலும் நீக்கப்பட்டு ஒரு புதிய சட்டம் சர்வதேச சட்டத்துக்கு அமைவாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அல்லது இருக்கும் சட்டத்தை முற்றுமுழுதாக மாற்றியமைத்து சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அநுர அரசின் இனவாதத்தை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி. | Tamil Political Prisoners Release Gajendrakumar Mp 

இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி நிற்கின்றது. இது கையொப்பம் பெறும் போராட்டம் ஊடாகவும், வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கூறுகின்றார்.

அவர் அதனைச் சொல்வதற்கு அரசியல் பின்னணி தான் காரணம். ஏனெனில் இதற்கு முதல் அவருடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வந்து சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று பேசியிருந்தார்.

ஆனால், தற்போது நீதி அமைச்சர் அந்த விடயத்திலிருந்து பின்வாங்குகின்றார். இதுவொரு அரசியல் காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

அரசியல் கைதி

அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியின் ஜே.வி.பி. அமைப்பினரின் உறுப்பினர்களும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களும் அரசியல் கைதிகளாகவே இருந்தனர்.

அநுர அரசின் இனவாதத்தை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி. | Tamil Political Prisoners Release Gajendrakumar Mp

இப்போதும் கூட அவர்கள் ஆட்சியில் இருந்திருக்காவிட்டால் வேறு ஒரு தரப்பு ஆட்சியில் இருந்திருந்தால், அவர்களது உறுப்பினர்கள் கைது செய்யப்படும்போது, அது அரசியல் நோக்கத்துக்கான கைதாகவே இருந்திருக்கும்.

ஆனால், அதே நிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான்.

இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இந்த நீதி அமைச்சர் கடந்த காலங்களில் இருந்த பிற்போக்குவாத நீதி அமைச்சர்களின் நிலைப்பாட்டுடன் இணைந்து போவது ஒரு பலத்தை ஏமாற்றத்தைத் தரும் விடயமாகும். இது தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கில் மாற்றம் என்று வந்த தேசிய மக்கள் சக்தியின் நாடகம் என்பதை நிரூபிக்கும் விடயமாகவே காணப்படுகின்றது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் எம்.பிக்களை பகடைக்காயாக வைத்து அரசியல் செய்யும் இந்தியா !

தமிழ் எம்.பிக்களை பகடைக்காயாக வைத்து அரசியல் செய்யும் இந்தியா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023