ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை மத்திய கிழக்கிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயத்தை ஈரானின் புரட்சிகர இராணுவப் படை (Revolutionary Guards) தெரிவித்துள்ளது.
போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்தை நிராகரித்துள்ள ஈரான், யுத்தம் எப்போது முடிவடையும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது எனவும் ட்ரம்பின் கூற்று முட்டாள்தனமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எண்ணெய் விநியோகம்
இதற்குப் பதிலளித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால் அந்த நாடு இதுவரை கண்டிராத மிகக் கடுமையான தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அத்தோடு, ஈரான் எமது எண்ணெய் விநியோகத்தை நிறுத்த முயன்றால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதை விட 20 மடங்கு பலமாகத் தாக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில், பெப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் குறைந்தது 1,332 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நாவுக்கான ஈரானிய தூதர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தாக்கப்பட்டதில் தெஹ்ரான் நகரம் கறுப்புப் புகையினால் சூழ்ந்துள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் மத்தியப் பகுதிகளிலும் லெபனானின் பெய்ரூட்டிலும் புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |