தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் செலவழிக்கப்பட்ட ரூபா. 538.79 மில்லியனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறவிட்டுக் கொள்ளுமாறு தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆகஸ்ட் 2024 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு இந்த பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அரசாங்க பெறுகைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள், விதி முறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது ஒக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் "இளைஞர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்பது" என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட 6 திட்டங்களின் ஒழுங்குமுறை, செயல்திறன் மற்றும் அதன்பயன் குறித்து ஆராய்ந்த சிறப்பு தணிக்கை அறிக்கையிலே இந்தப் பரிந்துரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில், "இளைஞர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்பது" (Smart Youth) புத்தாண்டு விழா, தேசிய இளைஞர் வெசாக் விழா, தேசிய இளைஞர் பொசன் விழா, இளைஞர் ஒன்றுகூடல், ஆண்டு நிறைவு 31வது இரவு இளைஞர் கொண்டாட்டம் மற்றும் ஸ்மார்ட் இளைஞர் கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
தேசிய கணக்காய்வு அலுவலகம்
இதற்காக ரூ. 538.79 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது, அதில் ரூ. 45.29 மில்லியன் நிலுவைத் தொகையாக உள்ளது.
இந்த திட்டங்கள் எதுவும் இளைஞர் மன்றத்தின் முன்னுரிமைப் பணிகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும், அவை வருடாந்த செயல் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது.
இந்த நிகழ்ச்சிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கப்பட்ட 496.25 மில்லியன் ரூபாயில், மன்றத்திற்கு ரூ. 74.20 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மீதமுள்ள ரூ. 464.59 மில்லியன் மன்றத்தின் வருடாந்த மூலதன ஒதுக்கீட்டில் செலவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா
