ஏழு கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள் திருட்டு: ஒருவர் கைது
Sri Lanka
Department of Meteorology
Climate Change
Weather
By Shalini Balachandran
இரத்தினபுரியில் இரத்தினக்கற்கள் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஹில்லன பகுதியில் உள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டிலேயே இந்த இரத்தினக்கற்களைத் திருடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினக்கற்கள்
திருடப்பட்ட இரத்தினக்கற்கள் ஏழு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி