மஹிந்த தலைமையிலான கூட்டத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் மோதல்?
podujana peramuna
mahinda rajapaksha
clash
By Sumithiran
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இரவு இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் ஆளும் பொதுஜன பெரமுன மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் இதன்போது அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலைமையை சமாளிக்க பிரதமரினால் குழு ஒன்றும் அமைக்கப்பட்ட அதேவேளை, குழுவின் இறுதி பரிந்துரை வரும்வரை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க மாட்டேன் என பிரதமர் உறுதியளித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி