தேசிய ஊடகத்திலிருந்து மொழி நீக்க விவகாரம்! ஊடகத்துறை அமைச்சரிடம் முறையிட்ட மனோகணேசன்
அரச ஊடகத்தின் குறியீட்டிலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழி நீக்கப்பட்டமை தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகபெருமவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை ஆழமாக சுட்டிக்காட்டியுள்ளதாக முன்னாள் மொழிக் கொள்கை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று காலை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதுடன், அதனை அமைச்சருக்கும் பகிர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தனது பதிவில்,
"தேசிய" ரூபவாஹினி கூட்டுத்தாபணம், "தேசிய" மற்றும் "இணைப்பு" மொழிகளை தனது "அடையாள குறியீட்டில்" இருந்து திடீரென தவிர்த்து கொண்டிருப்பது, கண்டிக்க தக்கது.
தனியார் ஊடக நிறுவனங்கள் தங்களது, அடையாளத்தை எவ்விதமாக காட்டி, திருத்திக்கொண்டாலும், அரசாங்கத்தின் தேசிய ஊடக நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது.
இதை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் தன்னிச்சையாக மேற்கொண்டார் அல்லது அரசாங்கத்தின் கொள்கையா என அமைச்சரிடம் வினவினேன்.
மும்மொழிகளும் ஒன்றாக பல்லாண்டுகளாக இருந்ததை, இன்று பிரிப்பது என்பதுதான் பிரிவினைவாதம் என சுட்டிக்காட்டியுள்ளேன்.
எனது கருத்துகளுக்கு அமைதியாக செவிமடுத்த அமைச்சரும், எனது நண்பருமான டலஸ் அழகபெரும, இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"தேசிய" ரூபவாஹினி தனது அடையாள குறியீட்டிலிருந்து, #தமிழ், #ஆங்கிலம் ஆகிய "தேசிய", "இணைப்பு" மொழிகளை அகற்றியுள்ளது. #அய்யோஸ்ரீலங்கா..! தோழர் அமைச்சர் டல்லஸ் அளகபெரும, இது உங்களுக்கு..!@DullasOfficial @rupavahinitv #manoganesan #lka pic.twitter.com/7mSXbAmN39
— Mano Ganesan (@ManoGanesan) February 25, 2022
