வலுவிழக்கும் ரூபாய் - தொடர்ந்து 300 ரூபாக்கு மேல் நிற்கும் டொலர்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (18) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாளுக்கான (21.1.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 326.74 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 334.26 ரூபாயாக பதிவாகியுள்ளது.
சுற்றுலா வருமானம்
மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நீடித்து வரும் போர் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுலா வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 256.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
அதனுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் ஏப்ரல் மாத வருமானம் 38.8 வீதத்தினால் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |