பசிபிக் பெருங்கடலில் மூன்று சக்திவாய்ந்த சூறாவளிகள்!
தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லோவெல் (Lowell), கரினா (Karina) மற்றும் மரி (Marie) என பெயரிடப்பட்ட மூன்று சூறாவளிகளும் தற்போது பசிபிக் பகுதியில் உறுவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி நாசாவின் செயற்கைக்கோள் அவதானிப்புகளும் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் பசிபிக் பகுதியில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
ஹவாய் தீவுகள்
இந்த மூன்றில் லோவெல் சூறாவளியே ஹவாய் தீவுகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதன் பாதை ஹவாயின் மேற்குப் பகுதிகளை நோக்கி திரும்பக்கூடும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சூறாவளி நேரடியாக நிலப்பரப்பைத் தாக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
லோவெல் சூறாவளி ஒரு கட்டத்தில் மணிக்கு 160 மைல் (சுமார் 257 கி.மீ.) வேகத்திலான காற்றுடன் Category 5 வலிமையை எட்டியதாகவும், பின்னர் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நீரோட்டங்கள்
ஹவாயில் கடுமையான அலைகளுக்கு எச்சரிக்கை சூறாவளியின் நேரடி தாக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், ஹவாய் தீவுகளில் கடுமையான கடல் அலைகள் மற்றும் ஆபத்தான நீரோட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சில கடற்கரைகளில் 12 அடி வரை உயரமான அலைகள் உருவாகக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் அலை உயரம் 14 அடியை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை, திடீர் வெள்ளம், கடல் நீர் உள்வருதல் மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அபாயங்கள் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |