ரஷ்ய படைகளின் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி- 19 பேர் மாயம்!
death
missing
rusia
ukraine
war
By Kalaimathy
ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக, உக்ரைன் காவல்துறையினரை மேற்கோள்க் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதேவேளை 19 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மரியுபோல் நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலை எதிர்த்து தமது விமானப்படை போராடி வருவதாக உக்ரைன் இராணுவத்தின் அறிக்கைகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்