உக்ரைன் - ஜைட்டோமைர் நகரில் விமானத் தாக்குதல்
attack
russia
ukraine
By Vanan
உக்ரைன் - ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவலை அந்நாட்டு அரசு அவசரகால செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலால் மூவர் காயமடைந்திருப்பதாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் 10 வீடுகளும், ஒரு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
சேதமடைந்த வீடுகள் சிலவற்றில் தீ பற்றி எரிவதாகக் காட்டும் சில புகைப்படங்களையும் அந்தச் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
