உக்ரைன் பகுதிகளை தன்வசப்படுத்தி ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
கிழக்கு மற்றும் வடகிழக்கு உக்ரேனில் உள்ள நான்கு குடியிருப்புப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
உக்ரேனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராஸ்நோயார்ஸ்கோயே என்ற குடியிருப்புப் பகுதியை ரஷ்யாவின் சென்டர் படைப்பிரிவு கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நோர்த் படைப்பிரிவினர் சுமி பிராந்தியத்தில் உள்ள மாலா ஸ்லோபோட்கா மற்றும் மொக்ரிட்சியாவ் ஆகிய பகுதிகளையும், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள யுர்சென்கோவே பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு தடுப்பு மண்டலத்தை உருவாக்குவதாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே கிழக்கு உக்ரேன் முழுவதிலும் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: Bloomberg
இருப்பினும், ரஷ்ய முன்னேற்றங்களை வலுவாக எதிர்த்து நிற்பதாகவும், ரஷ்யப் படைகளுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் உக்ரேன் தரப்பு தெரிவித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |