மேற்கத்தைய நாடுகளை கதிகலங்க வைத்துள்ள ரஷ்யா சீனா கூட்டு - வெளியானது வலுவான கண்டனம்!
மேற்கத்திய நாடுகளின் அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ரஷ்யா சீனாவுடன் இணைந்து கூட்டு கடற்படை இராணுவ பயிற்சியை நிறைவு செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதுடன், ரஷ்யாவிற்கு எதிராக பல அடுக்கு பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகிறது.
ரஷ்யாவின் போரை ஆதரிப்பதான சீனாவின் போக்கு
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை அத்துமீறிய செயல் என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, ரஷ்யாவின் போர் நடவடிக்கையை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே அறிவித்து வருகிறது.
அத்துடன் போர் தாக்குதலுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காத சீனா, ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.
மேலும் உலக பொருளாதாரத்தில் மேற்கத்திய நாடுகளின் நேரடியான போட்டியாளராக சீனா மாறியுள்ளது. இத்தகைய நேரத்தில் ரஷ்யாவுடன் தொடர்ந்து நெருக்கமான நட்புறவை சீனா காட்டி வருவதற்கு மேற்கத்திய நாடுகள் வலுவான கண்டனம் தெரிவித்து வருகிறது.
கூட்டுப் படைப் பயிற்சி
இந்நிலையில் கிழக்கு சீனக் கடலில் சீன மற்றும் ரஷ்ய கடற்படைகளுக்கு இடையிலான ஏழு நாள் கூட்டு கடற்படை ஒத்திகை கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது என்று சீனாவின் அரசுக்கு சொந்தமான Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த தசாப்தத்தில் இருந்து இதுவரை ஜோஷானிலிருந்து தைஜோ வரையிலான பிராந்தியத்தின் கிழக்கே உள்ள கடலில் மேற்கொள்ளப்பட்ட பதினொராவது கூட்டுப் பயிற்சி இதுவாகும்.
இரு நாட்டு ஒத்துழைப்பு
கூட்டு இராணுவ பயிற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த சீன கடற்படையின் மேஜர் ஜெனரல் வாங் யூ, “இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையிலான "ஒத்துழைப்பின் மற்றொரு வெற்றிகரமான எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
