ஜேர்மனின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு: கடுமையாக விமர்சிக்கும் ரஷ்யா
ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.
ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தெரிவானது தொடர்பில் ஜேர்மன் எடுத்துள்ள தீர்மானமே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.
கடந்த 18 ஆம் திகதி ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின்(Vladimir Putin) 88% வாக்குகளுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார்.
ஜேர்மனின் அறிவிப்பு
அதனை தொடர்ந்து, அந்த தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் இல்லை என தெரிவித்து வாக்குப்பதிவின் போது ஆயிரக்கணக்கான எதிர்கட்சிக்காரர்கள் வாக்குச்சாவடிகளில் போராட்டத்தை நடத்தினர்.
அதேவேளை, அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளரும், புடின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்து, போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார், ஆகையால் இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் இல்லை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்ய அதிபர் புடினை, அதிபர் என குறிப்பிடப்போவதில்லை என ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ் அறிவித்துள்ளார்.
முட்டாள்தனமான முடிவு
ஓலாஃப் ஷோல்ஸின் இந்த அறிவிப்பானது, ரஷ்யாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன் அது முட்டாள்தனமான முடிவு என ரஷ்யா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளளது.
அத்தோடு, ஓலாஃப் அரசின் இந்த முடிவு, ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளாகத் தெரிவதாகவும் ரஷ்யா விமர்சித்துள்ளது.
இங்கிலாந்தில் பட்டப்பகலில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞன்!! தமிழர் வாழும் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிச் சம்பவம்!!(video)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |