ரஷ்யாவின் மறுதலிப்புக்கு பின்னணியில் உள்ள ரகசியம்! புடினிடம் சென்ற ஈரான் உச்ச தலைவரின் செய்தி
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டு ஒப்பந்தம் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த ஒப்பந்தம் ஒரு முறையான இராணுவக் கூட்டணியை உருவாக்குவதை உள்ளடக்கவில்லை என கிரெம்ளின் தெளிவுபடுத்தியுள்ளது.
கமேனியின் விசேட செய்தி
மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளின் தகவல்படி, ஈரானுக்கு ஆளில்லா விமானங்களை வழங்கவும், அமெரிக்க இராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களுக்கான இலக்குகள் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் ரஷ்யா இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் விசேட செய்தியை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் நேரில் கையளித்துள்ளார்.
ரஷ்யாவின் ஒத்துழைப்பு
இதனைத் தொடர்ந்து, வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Image Credit: Atlantic Council
போர் தொடங்கிய காலம் முதல் ரஷ்யாவும் ஈரானும் நெருக்கமான தொடர்பைப் பேணி வருவதுடன், அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக மோதல்களைத் தீர்க்கவும் தீர்வுகளைக் கண்டறியவும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்