உக்ரைன் கலாசார அரண்மனையை தாக்கி அழித்தது ரஷ்ய படை -அதிர்ச்சியில் உலகம் (வீடியோ)
உக்ரைன் தலைநகர் கார்கிவ் நகரில் உள்ள கலாசார அரண்மனையை ரஷ்ய இராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தமை அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
கார்கிவ் நகரின் லோசோவா பகுதியில் உள்ள கலாசார அரண்மனையே தாக்குதலுக்கு இலக்காகி அழிந்தது.
இந்த தாக்குதலில் 1 குழந்தை உட்பட பொதுமக்கள் 7 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
The ?? are deliberately terrorizing the civilian population of Ukraine. Unique shots from surveillance cameras: a Russian missile hitting the Palace of Culture in Lozova, Kharkiv Region. 7 local residents were injured, including 1 child. #airdefenseforukraine. We need it today! pic.twitter.com/5luJWy3s7f
— Defence of Ukraine (@DefenceU) May 20, 2022
அத்துடன் இன்று உக்ரைனுக்கு விமானப்படையே தேவை என்ற கருத்தையும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அந்த ட்விட்டர் பதிவின் முலம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனின் பாதுகாப்பு வல்லுநர் Rob Lee தெரிவித்த தகவலில், உக்ரைனின் கலாசார அரண்மனையை ரஷ்ய இராணுவம் Kh-22 ஏவுகணை முலம் தாக்கி அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
