ரஷ்யா போர் பற்றிய தவறான செய்தி வெளியிட்ட கூகுள் நிறுவனம் - 26 இலட்சம் அபராதம்
கடந்த சில நாட்களாகவே ஆப்பிள் மற்றும் விக்கிபீடியா போன்ற நிறுவனங்கள் மீது தவறான செய்தி பரப்புகை குறித்து அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.அவ்வரிசையில் தற்போது கூகுள் நிறுவனமும் உள்வாங்கப்பட்டுள்ளது.
சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது.
வழக்கு விசாரணைகள்

இந்த போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய காணொளிகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருப்பதாக கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா அறிவுறுத்தல் வழங்கியும் அதனை நீக்கவில்லை.
எனவே இது தொடர்பாக மொஸ்கோவில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூகுள் நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபிள் (சுமார் ரூ.26 இலட்சம்) அபராதம் விதித்து உள்ளது.