உக்ரைனில் தீவிர தாக்குதல்: முன்னணி பகுதிகளை உடைத்துக்கொண்டு முன்னேற முயற்சிக்கும் ரஷ்யா படைகள்
தமது நாட்டின் முக்கிய இரு எல்லை பகுதிகளை தாக்கி முன்னேறுவதற்கு ரஷ்யா தீவிரமாக முயற்சித்து வருவதாக உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பிராந்தியங்களின் எல்லைப் பகுதிகளில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையிலலேயே ரஷ்யாவின் இந்த திட்டம் குறித்து உக்ரைனின் மாநில எல்லைப் பாதுகாப்பு சேவை மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு
இதன்படி சுமி பிராந்தியத்தில் , எதிரிகள் முக்கியமாக ஷோஸ்ட்கா மற்றும் கொனோடாப் மாவட்டங்களில் உக்ரைனியப் பகுதிக்குள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள வில்குவாட்ஸ்கா பகுதியிலும் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாநில எல்லைப் பாதுகாப்பு சேவையின் கூற்றுப்படி, கடந்த வாரத்தில், எல்லைப் பாதுகாப்புப் பிரிவுகள் 29 எதிரித் தாக்குதல்களை முறியடித்து, 2,400-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ரஷ்ய ஆளில்லா விமானங்கள் மற்றும் 430-க்கும் மேற்பட்ட ரஷ்ய ஆயுதங்கள், இராணுவ உபகரணங்களை அழித்துள்ளன என கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |