உக்ரைன் தலைநகரில் அதிபயங்கர தாக்குதல்களை தொடுக்கும் ரஷ்ய படைகள்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிகிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் நகரத்தின் இராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.
வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள குடியிருப்பு அல்லாத இடத்தில், ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிர வான்வழித் தாக்குதல்கள்
இதில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்ததுடன், நகர மையப் பகுதிக்கு சற்று தெற்கே உள்ள மற்றொரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Image Credit: NBC News
மேலும், புறநகர்ப் பகுதியில் உள்ள சந்தைக் கடைகள் தீப்பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமற்ற டெலிகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய வாரங்களாகவே கீவ் மற்றும் உக்ரைனின் பிற நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |