உக்ரைனில் முக்கிய வான்படை தளபதியை இழந்தது ரஷ்யா(photo)
உக்ரைனில் படையெடுப்பை மேற்கொண்டுள்ள ரஷ்யா, மிகவும் முக்கியமான வான்படை தளபதியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரஷ்யாவின் 331st வான்வழி படைப்பிரிவின் தளபதியான கேணல் செர்ஜி சுகரேவ் என்பவரே உக்ரைன் இராணுவத்தின தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இவர் உக்ரைன் மீது வான் தாக்குதலை தலைமை தாங்கி நடத்திவருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2014ல் இலோவைஸ்க்(Ilovaisk) நடத்தப்பட்ட படுகொலைக்கு நேரடி பொறுப்பாளர் ஆவார்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா இதுவரை பல தளபதிகளை இழந்துள்ள நிலையில், ரஷ்யாவின் மிக திறமையான வான்வழி படைப்பிரிவின் தளபதி கேணல் செர்ஜி சுகரேவ்வை இழந்து இருப்பது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Confirmed: Colonel Sergey Sukharev, Russia’s 331st Airborne Regiment commander, has been eliminated in Ukraine.
— KyivPost (@KyivPost) March 18, 2022
He was directly responsible for the Ilovaisk massacre of 2014. pic.twitter.com/8RoSC4dR5j
