உக்ரைன் வான்பரப்பை நோட்டமிடும் ரஷ்ய உளவு பலூன்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Ukraine
By pavan
உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிக்க ரஷ்யா உளவு பலூன்களை பயன்படுத்தக்கூடும் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் படைகள் கடந்த புதன்கிழமையன்று உளவு கருவிகள், மற்றும் ரேடார் பிரதிபலிப்பாளர்களைக் கொண்டு சென்றதாக நம்பப்படும் ஆறு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவு பலூன்கள்

இதனையடுத்து இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் உளவு பலூன்களின் மூலம் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகள் கண்காணிக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.
அதேவேளை, குறித்த பலூன்களை கொண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முயற்சிக்கலாம் எனவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி