நேட்டோ மீது ரஷ்யாவின் அச்சுறுத்தல்: ஐந்து ஆண்டுகளுக்குள் போர் எச்சரிக்கை
ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான் என நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ஐந்து ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக இராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும் என நட்பு நாடுகளை அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மோதல் நம் வாசலில் உள்ளது அத்தோடு ரஷ்யா ஐரோப்பாவில் மீண்டும் போரை கொண்டு வந்துள்ளது.
இராணுவ பலம்
நாம் தயாராக இருக்க வேண்டும், ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான் அத்தோடு நமது கூட்டாளிகளில் அதிகமானோர் அமைதியாக மெத்தனமாக இருப்பதாக நான் அஞ்சுகிறேன்.

இதில் உள்ள அவசரத்தை உணரவில்லை அத்தோடு பலரும் காலம் நம் பக்கம் இருப்பதாக நம்புகின்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக இராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்.
தளவாடங்கள் உற்பத்தி
கடந்த தலைமுறையினர் போல போரை தடுக்க பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செலவினங்களை அதிகரிக்க வேண்டும்.
ரஷ்யா ஏற்கனவே நமது சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

நமது தாத்தா மற்றும் பாட்டி அல்லது கொள்ளு தாத்தா மற்றும் பாட்டி அனுபவித்த போரின் அளவிற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
நமது ஆயுதப்படைகள் நம்மை பாதுகாக்க தேவையான அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |