பிரித்தானியாவை மூழ்கடிக்கும் பாரிய திட்டம் - ஐரோப்பாவுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய நீர்மூழ்கி!
பிரித்தானியா முழுவதையும் மூழ்கடிக்கும் பாரிய திட்டத்துடன் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ரஷ்யா நிலை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல், கதிரியக்க சுனாமியையே உருவாக்க வல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முழு பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புடின் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்கு அருகில் நிறுத்தப்படடுள்ள நீர்மூழ்கி

உலகிலேயே பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது.
இந்த, Barents கடலின் அருகில்தான் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அமைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புடின் ஆதரவாளர் ஒருவர் அந்த நீர்மூழ்கி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், அது முழு பிரித்தானியாவையே கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கும் திறன் கொண்டது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.