ரஷ்யா வீழ்த்திய ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உடல்கள் உக்ரைனிடம்!
ரஷ்யா 1,000 உக்ரைன் வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளதாக கீவ் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலாக உக்ரைன், 38 ரஷ்ய வீரர்களின் உடல்களை திருப்பி வழங்கியதாக மாஸ்கோ உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பரிமாற்றத்தை ரஷ்யாவின் முதன்மை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெதின்ஸ்கி டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஒப்பந்தம்
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் போரில், இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்களை பரிமாறிக் கொண்டுள்ளன.

Image Credit: Al Jazeera
2025 இல் இஸ்தான்புலில் நடந்த பேச்சுவார்த்தையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பரிமாற்றம் நடைபெற்றது.
தாக்குதல்கள்
அந்த ஒப்பந்தத்தின் படி, 12,000 வீரர்களின் உடல்கள் மற்றும் கடுமையாக காயமடைந்த, நோயுற்ற, 25 வயதுக்குக் குறைந்த போர் கைதிகளை விடுவிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கடைசி பரிமாற்றத்தில், ரஷ்யா 1,000 உடல்களை உக்ரைனுக்கு வழங்கி 30 உடல்களை பெற்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இரு தரப்பும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன; சமீபத்தில் கார்கிவ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |