ரஷ்யாவிற்கு சென்ற சரக்குக் கப்பலை இடைநடுவில் மடக்கிய பிரான்ஸ் கடற்படை!
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும் சரக்குக் கப்பலை, ஆங்கில கால்வாய் வழித்தடத்தில் பிரான்ஸ் கடற்படை இடைமறித்துள்ளது.
பிரான்ஸ் அதிகாரிகள், புதிய ஐரோப்பிய ஒன்றியத் தடைகளுக்கு இணங்க கப்பல் இடைமறிக்கப்பட்டது என்றும், அது வடக்கு துறைமுகமான பவுலோன்-சுர்-மெர்க்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இதுவரை படையெடுப்பில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ரஷ்யர்களின் சடலங்களை அகற்றி ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
நாட்டின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் ஒரு தொலைக்காட்சி மாநாட்டில் இதுதொடர்பில் தெரிவித்துள்ளார். இவை ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்பாளர்களின் உடல்கள். இது ஒரு மனிதாபிமான தேவை.
ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் உடல்களை பிரதேசத்தை விட்டு வெளியேற்றி ரஷ்ய கூட்டமைப்புக்கு அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னர், 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் பேஸ்புக்கில் தெரிவித்திருந்தது. இருப்பினும் ரஷ்யா இதுவரை எந்த உயிரிழப்புகளையும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
