எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு - தேவையான எரிபொருள் வழங்கப்படும் - ரஷ்ய உறுதி
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஷ்ய உறுதி அளித்துள்ளது.
மத்திய கிழக்கு போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
வர்த்தக உடன்படிக்கை
அத்துடன் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நிலவும் சுமார் 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் நீண்டகால வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குறிப்பாக எரிசக்தித் துறையில் ரஷ்யா வழங்க முன்வந்துள்ள ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்