உக்ரைன் போருக்கு தீர்வு கிட்டுமா.! பல நாள் கேள்விக்கு கிடைத்த பதில்
உக்ரைனுக்கும் ரஷ்யாக்கும் இடையிலே ஏற்பட்ட போரினை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரமுடியுமா என்பது குறித்து ரஷ்ய தூதா் கென்னடி காடிலோவ் கலந்துரையாடியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யப்போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அது குறித்து ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான ரஷ்யத் தூதா் கென்னடி காடிலோவ் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, தற்போது நிலவி வரும் கடுமையான போர்ச்சூழலில், ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடினுக்கும் உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கிக்கும் இடையே நேரடியாக பேச்சுவாா்த்தை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
ஆகவே, இந்த போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை. இப்போதைய சூழலில், இந்தப் போா் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாராலும் கூற முடியாது.
மேற்கத்திய நாடுகளின் தூண்டல்
உக்ரைனுக்கு ஆயுதங்களையும் பிற உதவிகளையும் அளித்து, அந்த நாட்டு வீரா்களை ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தொடா்ந்து தூண்டி வருகின்றன.
உக்ரைனின் கடைசி வீரன் சாகும்வரை இந்தப் போரைத் தொடர மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.
எனவே, பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

