புடினின் அணுவாயுதம் - வெடித்தால் சூரியன் தெரிய 5 வருடங்கள் எடுக்கும்!
உலகிலேயே ரஷ்யாவிடம்தான் மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டுகள் இருக்கின்றன. உலகிலேயே மிக அதிகமாக அணுகுண்டுகளை தயாரித்து வைத்திருக்கின்ற நாடும் ரஷ்யா தான்.
ரஷ்யாவிடம் 5,977அணுகுண்டுகள் இருப்பதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
உலகத்தில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரியதும், குண்டுகளுக்கெல்லாம் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகின்றதுமான Tsar Bomba என்ற AN602 thermonuclear aerial bomb ரஷ்யாவிடம் தான் இருக்கின்றது.
சாத்தான் -2
அதேபோன்றுதான் கடந்த வருடம் ரஷ்யா பரிட்சீத்துப் பார்த்திருந்த Sarmat intercontinental ballistic missile.
Satan 2- அதாவது 'சாத்தான்-2' என்ற பெயரில் ரஷ்யர்களால் அழைக்கப்படுகின்ற Sarmat intercontinental ballistic missile , உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அத்தனை ஏவுகணைகளையும் விட மிகவும் சக்திவாய்ந்த ஒன்று என்று கூறப்படுகின்றது.
உலகில் தற்பொழுதுள்ள எந்த வான்பாதுகாப்பு பொறிமுறைகளாலும் ரஷ்யாவின் இந்த ஏவுகணையை தடுத்த நிறுத்த முடியாது என்று கூறப்படுகின்றது.
இப்படியான நிலையில், ரஷ்யா தனது அணுவாயுதங்கள் சிலவற்றை பெலாரசுக்கு நகர்த்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கடந்த வாரம் அறிவிதிருந்தார்.
- எதற்காக பெலாரசுக்கு தனது அணுவாயுதங்களைக் கொண்டுசென்று நிறுத்துகின்றது ரஷ்யா?
- ரஷ்யாவின் இந்த நகர்வை அமெரிக்கா தலைமையிலான மேற்குலம் எவ்வாறு பார்க்கின்றது?
- தனது அணுவாயுதங்களை பெலாரசுக்கு நகர்த்துகின்ற முடிவை ரஷ்யா ஏன் பகிரங்கமாகக் கூறுகின்றது?
- ரஷ்யாவின் அணுவாயுதங்கள் பெலாரசுக்கு நகர்த்தப்படுவதால் ரஷ்யாவுக்கு இராணுவ ரீதியிலான அணுகூலங்கள் என்ன? - பிரதிகூலங்கள் என்ன?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி
முன்னைய பதிவுகள்
அமெரிக்காவைக் குறிவைத்து நகரும் ரஷ்ய இராணுவம் - புடினின் அதிரடி..!
நள்ளிரவில் வந்த மர்ம விமானங்கள்!! இந்தியாவுக்கு ஆபத்து
