ரஷ்ய படையினர் உக்ரைன் பெண்கள் மீது வன்கொடுமை? பகிரங்கமான தகவல்!
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்ச்சியாக 10வது நாளாக யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நகரங்களில் பெண்கள் மீது ரஷ்ய படையினர் பாலியல் வன்கொடுமை புரிவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த தகவலை உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், குலேப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
உக்ரேனிய நகரங்களில் ரஷ்ய படையினர் பெண்களை பாலியல் வன்கொடுமை புரியும் போது, சர்வதேச சட்டத்தின் செயல்திறனைப் பற்றி பேசுவது நிச்சயமாக கடினம்.
ஆனால் இறுதியில் இந்த போரை சாத்தியப்படுத்தியவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதிசெய்யும் நாகரிகத்தின் ஒரே கருவி இதுதான் என்று லண்டனில் உள்ள சாதம் ஹவுஸில் நடந்த ஒரு நிகழ்வில் குலேப் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே இரு நாடுகளும் சண்டையிட்டு வரும் நிலையில் குலேப்பின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கம் போது உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் வன்கொடுமை செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.