ரஷ்ய துருப்புகளின் கோரமுகம்!! உக்ரைனில் தொடரும் அச்சநிலை
உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலையொன்றின் மீது ரஷ்யா குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 60 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என உக்ரைன் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தின் முன்னரங்கப் பகுதியில் உள்ள Bilohorivka என்ற இடத்தில் உள்ள பாடசாலையில் சுமார் 90 பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்திருந்தனர்.
குறித்த பாடசாலை மீதே ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறியுள்ள உக்ரைனின் அவசர சேவைகள் பிரிவு, தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை தீ பற்றி எரிவது போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ளது.
இந்தத் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
