அநுர அரசின் அரசியல் பழிவாங்கல் - மனோ கணேசன் சீற்றம்
அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த (22.08.2025) கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் ரணில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி
பட்டலந்த வதை முகாம், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே, அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.
எனவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருந்தால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைந்து இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 8 மணி நேரம் முன்
