ரணிலின் செயலாளருக்கு எதிராக தீவிர முடிவு: களத்தில் இறங்கிய சிஐடி!
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட இங்கிலாந்து பயணத்தின் செலவுகளுக்காக அரச நிதி ஒதுக்கீட்டை அனுமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இது குறித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
கடவுச்சீட்டு பறிமுதல்
இதற்கமைய, கொழும்பு கோட்டை நீதவான், சிஐடியின் கோரிக்கையின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு துறைக்கு சமன் ஏகநாயக்கவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஏகநாயக்க, அரசின் தலைமை கணக்கு அதிகாரியாக இருந்தபோது, தனிப்பட்ட பயணத்திற்கு உரிய முறையான சரிபார்ப்புகள் இன்றி நிதி விடுவித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
சிஐடி கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘B’ அறிக்கையில், எகநாயக்கவிடமிருந்து கூடுதல் சாட்சியங்களைப் பெற வேண்டியிருப்பதாகவும், அவர் வெளிநாடு சென்றால் விசாரணை பணிகள் பாதிக்கப்படும் என்பதால் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய உத்தரவு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 4 மணி நேரம் முன்
