ஒரே இரவில் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணைகள்
ஒரே இரவில் ரஷ்யா ஏவிய 4 ஏவுகணைகளில் மூன்றை உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் விமானப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு உக்ரைனில் உள்ள ஒடேசாவின் கருங்கடல் பகுதியில் அந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இலக்குகளை அடையவில்லை
உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள்(cruise, ballistic missiles) மற்றும் தாக்குதல் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் உக்ரைன் மக்களுக்கு எதிரான தங்கள் பயங்கரவாதத்தைத் தொடர்கின்றனர், உக்ரைனின் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகளைத் தாக்குகிறார்கள்
ஆனாலும், ரஷ்ய ரொக்கெட்கள் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk )பகுதியில் தங்கள் இலக்குகளை அடையவில்லை உக்ரைன் விமானப்படை கூறியுள்ளது.
ரஷ்யா ஏவிய ஒரு ஏவுகணை உக்ரைன் பிராந்தியத்தில்(Odesa) விழுந்து வெடித்ததில் குறைந்தது 10 வீடுகள் சேதமாகியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.