புடினின் கொலை முயற்சிக்கு புதிய ஆதாரம்
உக்ரைன் விமானப்படை உக்ரைனிய தலைநகர் கியேவில் தனது நாட்டுக்குச் சொந்தமான ஆளில்லா வான்கலம் ஒன்றை சுட்டு வீழ்த்தியமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(4) மாலை உக்ரைனிய அதிபர் பணியகத்திற்கு அருகில் உள்ள பகுதியி்ல் உக்ரைனிய வான் பாதுகாப்பு படையினர் இதனை சுட்டு வீழ்த்தியதால் சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வெடியோசைகள் ஏற்பட்டன.
ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம்
உக்ரைன் அதிபரின் தலைமை பணியாளர் முதலி்ல் இந்தச் சம்பவத்தை "இது ரஷ்யாவால் அனுப்பப்பட்ட ட்ரோன் எனக் குறிப்பிட்டாலும், உக்ரைனிய விமானப் படையினர் இது உக்ரைனின் ட்ரோன் எனவும் விரும்பத்தகாத சில சூழ்நிலைகளை தவிர்க்கவே இந்தக் கலம் அழிக்கப்பட்டதாகவும்" ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைனிய தலைநகரில் ஏன் உக்ரைனிய ட்ரோன் பறந்தது என்ற ஒரு ஐயம் உருவாகியுள்ளது.
இந்த ஐயத்தின் பின்னணியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்லும் நோக்கில் புதன்கிழமை(3) உக்ரைனில் இருந்து இரண்டு ட்ரோன்கள் அனுப்பப்பட்டதான ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிகிறது.
தொழிநுட்ப கோளாறு
ஏனென்றால் உக்ரைனிய தலைநகரில் உக்ரைன் வெடிபொருட்களை நிரப்பிய ட்ரோன்களை பறக்க விடுவதற்கு சாத்தியமில்லை.
மாறாக, ரஷ்யாவை நோக்கி அவை அனுப்பப்பட்ட நிலையி்ல் தொழிநுட்ப கோளாறு காரணமாக அதிலொன்று சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
