ரஷ்யாவில் கற்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! தவிக்கும் மாணவர்கள்
srilanka
students
russia ukraine war
visa card
By S P Thas
ரஷ்யாவில் கல்வியைத் தொடர்ந்து வரும் இலங்கை மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர் கார்ட் சேவைகள் ரத்து செய்யப்பட்டதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததனை தொடர்ந்து பல நாடுகள் தடைகளை விதித்துள்ளன.
ரஷ்யாவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்ந்து வருவதாகவும் நேற்று முதல் விசா மற்றும் மார்ஸ்டர் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவில் கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக ரஷ்யாவின் நாணய அலகாக ரூபெலின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் யுத்தம் இடம்பெற்றாலும் ரஷ்யாவில் கற்கும் இலங்கை மாணவர்கள் தொடர்ந்தும் கல்வியைத் தொடர வேண்டுமென விரும்புவதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி