7 ஆயிரம் ரஷ்ய படைகள் கொல்லப்பட்டனர்! உயர் அதிகாரிகள் பலரை சிறைபிடித்தது உக்ரைன்
srilanka
india
death
army
ukraine
war
peoples
By S P Thas
உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் அதிபர் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த எண்ணிக்கை 6 ஆயிரமாக இருந்தது என உக்ரைன் இன்றைய தினம் அறிவித்திருந்தது. மூத்த அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத் தளபதி ஒருவர் பலத்த காயமடைந்த பின்னர் பெலாரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
