உக்ரைனின் தாக்குதலால் முறிவடைந்த அமைதிப்பேச்சு
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா(russia) முன்வந்த நிலையில் உக்ரைனின் தாக்குதலால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில்(doha) இம்மாத தொடக்கத்தில் உக்ரைன்(ukraine) - ரஷ்யா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது.
உக்ரைன் திடீர் தாக்குதல்
இந்நிலையில், ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது. கடந்த 6ம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள், இராணுவ டாங்கிகள், ஆயுதங்களுடன் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்திற்குள் நுழைந்தனர். மேலும், ரஷ்ய வீரர்களையும் பணயக் கைதிகளாக சிறைபிடித்தனர்.
அப்பகுதியில் இராணுவ நிலைகளை அமைத்துள்ள உக்ரைன் இராணுவம் சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கியுள்ள ரஷ்யா
உக்ரைனின் இந்த திடீர் தாக்குதலால் தோஹாவில் நடைபெறவிருந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து ரஷ்யா பின்வாங்கியுள்ளது. இதன் மூலம் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மேலும் பல மாதங்கள் நீடிக்கலாம் என பதற்றம் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |