ஆசிய நாடுகளின் ஒற்றுமைக்கு உறுதியளித்தார் புடின்
உலகெங்கிலும் அச்சுறுத்தல்களை வழங்கி வரும் வாக்னர் குழுவினால் தூண்டப்பட்ட கலகம் சிறியதாக இருந்தபோதிலும், தனது நாடு நிலையானதாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியளித்தார்.
ஆசியாவில் உள்ள தலைவர்களுடன் நேற்று (04) இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மெய்நிகர் கூட்டத்தில் மேற்கண்டவாறு உறுதிமொழி வழங்கியுள்ளார்.
மேலைத்தேச நாடுகளின் அழுத்தம்

“ரஷ்ய மக்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த நாட்டுக்காக ரஷ்ய அரசியல் வட்டங்களும் முழு சமூகமும் தங்கள் ஒற்றுமையை, ஆயுதமேந்திய கலகத்திற்கு எதிராக ஐக்கிய முன்னணியாக பதிலளித்தமை நாட்டின் மீதான பொறுப்புணர்வை உணர்த்தியுள்ளது
மேலைத்தேச நாடுகளின் அழுத்தம் மற்றும் பொருளாதார தடைகள் அதாவது சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் என்று மோசகோவால் அழைக்கப்படும் இவ்வாறான உக்ரைனின் "ஆத்திரமூட்டல்களுக்கு" எதிராக ரஷ்யா நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் "குடிமக்களின் வாழ்வு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒழுங்கமைப்பை பேணும்" தனது முயற்சிகளை ஆதரிக்கும் SCO உறுப்பினர்களுக்கு புடின் நன்றி தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி அவர்களுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்த முயல்வதாகவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
யூரேசியக் குழுவானது சீனா மற்றும் இந்தியாவை உள்ளடக்கியது மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அதுமாத்திரமல்லாமல் சீனா, இந்தியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் SCO இன் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளமையை ரஷ்யா பார்க்கிறது. இவர்கள் அமெரிக்காவை எதிர்கொள்வதில் முக்கிய பங்காளிகளாகவும், உலக ஒழுங்கை ஆணையிடும் வாஷிங்டனின் முயற்சிகளாக அது சித்தரிப்பதை எதிர்ப்பதாகவும் உள்ளமை மகிச்சியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்