ரஷ்யாவும் சீனாவும் பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தம்!
பிரமாண்ட போர் பயிற்சி
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவும் சீனாவும் பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றன.
இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை வெளிப்படுத்த சீனாவின் படைகளுடன் சேர்ந்து பெரும் இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
வோஸ்டாக் 2022 (கிழக்கு 2022) பயிற்சியானது செப்டம்பர் 1 - 7 வரையான திகதிகளில் ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஜப்பான் கடலில் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டுப்பயிற்சி 50,000 துருப்புக்கள் மற்றும் 140 விமானங்கள், 60 போர்க்கப்பல்கள் உட்பட 5,000 ஆயுதப் பிரிவுகளை உள்ளடக்கியது.
பாரிய பயிற்சிக்கு தயாராகும் துருப்புக்கள்
பாரிய பயிற்சிக்கு தயாராகும் வகையில் சீனத் துருப்புக்கள், ரஷ்யாவிற்கு வரும் காணொளியை வெளியிட்டது. இந்தப் பயிற்சிகளில், பல முன்னாள் சோவியத் நாடுகள்,சீனா, இந்தியா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா மற்றும் சிரியாவின் துருப்புக்கள் பங்கேற்கவுள்ளன.
ரஷ்ய வான்வழி துருப்புக்களின் பிரிவுகள், நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் இராணுவ சரக்கு விமானங்கள் ஆகியன பயிற்சியில் பங்கேற்கும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் விரிவான மற்றும் பல உலகச் செய்திகளை இக்காணொளியில் காண்க,

