வடக்கில் படையினர் வசமுள்ள காணிகள் : கொழும்பில் வெடித்த போராட்டம்
வடக்கில் (North) இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (15) குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட “மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் பொது மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







