இராணுவ வீரர்களின் அன்னையரை சந்திக்கும் புடின்
உக்ரைன் மீதான போருக்காக அண்மையில் திரட்டப்பட்ட இராணுவத்தினரின் அன்னையரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
டொனெற்க்ஸ் பிராந்தியத்தின் மீது இன்று ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை அறிவித்துள்ளார்.
வழமையான சந்திப்பு
இதற்கிடையே ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனில் ஏற்படுத்தப்பட்ட மின்விநியோக தடை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை தொடரும் என்பதால், இந்தக் குளிர்காலத்தில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை தெரிவித்துள்ளது.
தாய்மார்களின் உண்மையான நிலைமைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் அவர்களை அதிபர் விளாடிமீர் புடின் நேரடியாக சந்திக்கவுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சந்திப்புக்களை விளாடிமீர் புடின் மேற்கொள்வது
வழமையான ஒன்றெனவும் திமித்ரி பெஸ்கோவ் மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
