வரலாற்றின் பக்கத்தை திருப்பி போட்ட ரஷ்ய ஓர்மம்
உலக வரலாற்றில் மிக முக்கிய இராணுவ முற்றுகை என்ற வரலாற்றுப் பதிவைப் பெற்ற ஒரு படை நடவடிக்கை தான் ஸ்டாலின் கிராட் முற்றுகை.
என்ன விலை கொடுத்தாவது ஸ்டாலின் கிராட்டை கைப்பற்ற வேண்டும் என்பது ஹிட்லரின் கனவு. அதற்கு வலுவான சில காரணங்களும் உண்டு.
ஸ்டாலின் கிராட் என்பது ரஷ்யாவின் மிக முக்கியமான தொழில் நகரம். அதைவிட அந்த நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்து இருந்ததால் அதனைக் கைப்பற்றி விட்டால் ரஷ்யாவின் தெற்கிற்கும் வடக்கிற்குமான விநியோகப் பாதைகளை துண்டாடி விடலாம் என்பது ஹிட்லரின் கணிப்பு.
ஆனால், அந்த நேரத்தில் தான் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு அங்கு அரங்கேற ஆரம்பித்தது.
ரஷ்ய வீரர்களும் மக்களும் இணைந்து தமது மண்ணை ஆக்கிரமிக்க வந்த ஜேர்மனிய நாசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சண்டையிட ஆரம்பித்தார்கள்.
உலகின் போரியல் வரலாற்றில் குறிப்பாக ஜேர்மன் படைகளுக்கு, அதிக இழப்பை ஏற்படுத்திய முற்றுகை என்ற பதிவையும் இந்த முற்றுகை பெற்றது. ரஷ்யா உலக வல்லரசாக மாறுவதற்கு அடித்தளமிட்ட முற்றுகை என்றும் இதனைக் குறிப்பிடலாம்.
அப்படிப்பட்ட வரலாற்றின் பக்கத்தை திருப்பி போட்ட ஸ்டாலின் கிராட் முற்றுகை பற்றியும் அந்த ஸ்டாலின் கிராட்டை முறியடித்த ரஷ்ய மக்களின் ஓர்மம் பற்றியும் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.