ரஷ்ய இராணுவத்திற்கு முன் நடனமாடிய நடிகை உக்ரைன் தாக்குதலில் பலி (காணொளி)
ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு முன்னால் நடனமாடிய ரஷ்ய நடிகை ஒருவர் உக்ரைனிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் போலினா மென்ஷிக் என்ற நடிகை நடனமாடிக்கொண்டிருந்த ஒரு நடன அரங்கம் நவம்பர் 19 அன்று ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது.
ரஷ்ய இராணுவ விடுமுறையை கொண்டாட நடிகை ஒரு நிகழ்ச்சியை வழங்கியதாக கூறப்படுகிறது.
20 ரஷ்ய வீரர்களும் பலி
இந்த தாக்குதலில் சுமார் 20 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியது, ஆனால் ரஷ்ய அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சுமார் 150 பேர் அமரக்கூடிய நடன அரங்கில் திருமதி மென்ஷிக் ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார் என்று உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
[the-reason-for-the-downfall-of-the-sri-lankan-team-
இந்த தாக்குதலில் காயமடைந்த மென்ஷிக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |