அதிகரிக்கிறது பதற்றம் -தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா உத்தரவு
russia
army
ukraine
invasion
By Sumithiran
உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்துமாறு படையினருக்கு ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்ததாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷ்ய படையினருக்கு அந்நாட்டு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய ராணுவம் உத்தவிட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்