உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படை ஊடுருவல் - தேவாலயத்தில் திடீர் சோதனை
உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் உக்ரைனிய படையினர் திடீரென அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்ட ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்திலேயே உக்ரைனின் பாதுகாப்பு சேவை படை(SBU) அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
ரஷ்ய படையின் சந்தேக நடவடிக்கை

மடாலயத்தில் ரஷ்ய சிறப்பு சேவைகளின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக உக்ரைன் பாதுகாப்பு சேவை படையின் (SBU) இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்ட ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து தேவாலயத்தின் தலைவர் பேட்ரியார்ச் கிரில் தெரிவிக்கையில்,இந்த சோதனையானது மிரட்டல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் பாதுகாப்பு சேவை படையின் அறிவிப்பு

உக்ரைன் பாதுகாப்பு சேவை படை(SBU) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய உலகின் மையம்", ரஷ்ய கலாசாரம் மற்றும் மதத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கருத்து முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகவே இந்த தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.