ஆற்று பாலத்தை தகர்த்த உக்ரைன் படை - ரஷ்யாவுக்கு பேரழிவு (படம்)
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர முயற்சியில் ரஷ்ய படைகள் கடந்த பல நாட்களாக இறங்கி உள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க உக்ரைனிய படைகள் ஆற்று பாலமொன்றை அழித்ததால், ரஷ்யாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகி விட்டதாக சர்வதேச தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் வழியாக சிவர்ஸ்கி டொனெட்ஸ் என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு மிதக்கும் பாலம் இருந்து வந்தது.
ஆற்றைக் கடந்து வருவதற்கு இந்த பாலம் ரஷ்ய படைகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. இதை அறிந்து நோட்டமிட்டு வந்த உக்ரைன் படையினர் அந்தப் பாலத்தை அதிரடியாக தாக்கி அழித்தபோது, ரஷ்யாவின் ஒரு படைப்பிரிவினர் ஆற்றில மூழ்கி பலியாகி விட்டதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலத்தின் அருகே நிறுத்தப்பட்ட இராணுவ வாகனங்களையும் உக்ரைன் படையினர் தாக்கி அழித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கூறுகையில்,
“ரஷ்யா குறைந்தபட்சம் ஒரு படைப்பிரிவை இழந்துள்ளது” என தெரிவித்தது. இந்த பாலத்தை அழித்ததையொட்டிய படங்களை உக்ரைன் வான்வழிப்படைகள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே உக்ரைன் அதிகாரிகள், கருங்கடலில் ரஷ்ய கப்பல் ஒன்றை தங்கள் படையினர் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உக்ரைனுக்கு முக்கிய வெற்றி ஆகும்.






ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
