உக்ரைனின் இரண்டு இளம் கால் பந்து வீரர்கள் ரஷ்ய படையினரின் தாக்குதலில் உயிரிழப்பு
attack
russia
killed
ukraine
footballers
By Sumithiran
ரஷ்ய படையினரின் தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 2 இளம் கால்பந்து வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விட்டாலி சபைலோ (வயது 21) மற்றும் டிமிட்ரோ மார்ட்டினென்கோ (வயது 25) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
சபைலோ, லிவிவ் நகரின் கர்பாத்தி இளைஞர் அணியின் 3வது பிரிவில் கோல் கீப்பராக இருந்து வந்துள்ளார். மார்ட்டினென்கோ, ஹோஸ்டோமெல் அணியின் 2வது பிரிவில் கடைசியாக விளையாடியுள்ளார்.
இவர்களது மறைவை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஃபிப்ரோ உறுதிப்படுத்தி உள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்களுடைய நினைவுகள், அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர்களது சக வீரர்களுடன் இருக்கும். இந்த போரில் கால்பந்து விளையாட்டில் முதல் இழப்பு பற்றிய செய்தி இது. அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்து உள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி